காதல் கடிதம்

உன் விரல் பிடித்தே நடக்க வேண்டும்
உன் அணைப்பினிலே கிறங்க வேண்டும்
உன்னில் பாதி நான் என்று கூற வேண்டும்
ஓராயிரம் நூற்றாண்டு வாழ வேண்டும்
மனதின் வலியை நான் மறந்திடவே -உன் தோள்
சாய்ந்தே உறங்கிட வேண்டும்
உன்னை காணாத நேரமும் உன் நினைவினிலே
காதல் -ஐ பெருக்கிட வேண்டும்
பட்டாம் பூச்சி சிறகாய் நானும்
வட்டமடித்திட வேண்டும்
எட்டு திக்கிலும் துணையாய் நீயும்
கூட பறந்திட வேண்டும்
கொட்டும் மழையினில் நானும் உன்கூட நனைந்திட வேண்டும்
ஒற்றை குடை அதிலே ஒரு நேசம் வளர்த்திட வேண்டும்
சுற்றும் பூமி அதுவும் -நம் கூடே
சுழன்றிட வேண்டும்
உயிர் முடியும் பொழுதினிலே உன் மடியில் கிடந்திட வேண்டும்