நட்பு மலர்கள்

மணம் பல
வீசிடும் மலர்கள்
நாங்கள்
நட்பெனும் நூலில்
மாலைகள்
ஆனோம்

முழு மதியிலும்
உண்டோ கலங்கம்
எங்கள்
மனதினில் அல்ல

மதி வளர
உதிர்ந்து விட்டோம்
விதியென்பேன்
மனம் வளருமோ?

காலம் அருளிய
புதுமலர்களும்
நன்மலரே
பொய்யில்லை


காலம் பதினாறு
ஆனாலென்ன
மறவேனோ என்
மனமகிழ் செய்த
மலர்களை

நட்பு பிரிந்திட்ட
வலி அறிந்ததோ
விதியது மலர்களை
முக நூலில்
மீட்டெடுக்க
அகமகிழ்ந்தேன்

எழுதியவர் : ராம் (18-Jun-14, 8:23 pm)
Tanglish : malarkal
பார்வை : 2477

மேலே