ராணி தேனீ

கண்கள் கிறங்கி கண்ணாமூச்சி ஆடுது
காது கற்பனையிலே அசரீரி கேட்குது
மனசு குழம்பி மரமேற பறக்குது
சித்தம் சிதறி சின்னா பின்னமாகுது
காலை நேரம் இரவா தோணுது
பால்நிலவு கூட வெயிலா காயுது
இப்படி குட்டையா குழம்பி நான் தவிக்க
சொகுசா அதுல மீன் பிடிக்கற சீமாட்டியே
என் காதல் பித்து தலைகேருது உனக்கோ
என் பித்தம் எல்லாம் இனிப்பா ருசிக்குது
போன ஜென்மம் நான் பண்ண தப்பெல்லாம்
இந்த ஜென்மம் உன் உருவமா கொல்லுது
காதல் எனக்கு கசப்பு மருந்து உனக்கோ
என் தவிப்பு எல்லாம் பஞ்சாமிர்த உணவு

எழுதியவர் : kaarmugil (18-Jun-14, 10:14 pm)
Tanglish : raani theni
பார்வை : 167

மேலே