மாலை நேர மழலையர் பூங்கா

( என் குழந்தை நண்பர்கள் குதூகலத்திற்காக)

தங்கமான பெண்ணே நீ ‘தான்யா’, இந்தத்
தங்கையோடு விளையாட வாரியா ?

’சங்கமித்ரா’ தான் உனக்குத் தோழியா , ஏன்
’திதிக்க்ஷா’வைச் சேர்த்துக்கொள்ள மாட்டியா?

’மீனு’ வோடு சேர்ந்து நாம நாலு பேரும்
மீண்டும் ஒரு மண்வீடு கட்டலாம் .

ஓடியாடி விளையாடி, ஊஞ்சலிலே ஏறி ஆடி,
உடல் வேர்க்க நன்றாகக் குதிக்கலாம்.

வீட்டிற்குப் போய்க் குளித்துவிட்டு ஒழுங்காக
வீட்டுப்பாடம் அத்தனையும் முடிக்கலாம்.

அம்மாவிடம் போவதற்கு ‘தனுக்ஷா’
அடம் பிடித்து அழுவதற்குப் பார்க்கிறா

ராத்திரியும் ஆயிட்டது போகலாம்
நாளை வந்து மீண்டும் ஆட்டம் போடலாம்!!

எழுதியவர் : (19-Jun-14, 1:31 pm)
பார்வை : 175

மேலே