பூப்புனித பூவே
தாயரியாய் நின்ற,
பூப்புனித பூவே..!
தீட்டறிந்து உன்னை ஏற்க்க மறுத்தவர்களிடம்,
செல்லா.
விவரம் தெரியா வயதில்,
பூப்புனிதது யார் குற்றம்? உன் குற்றமா?
இல்லை. இதுவே இயற்கையின் மாற்றம்.
யார் அருகே போனாலும்,
என்னை தொடதே, கிட்ட வராதே..!!
என்று அலறியடித்து ஓட,
தொற்று நோய் வந்தது போல்,
தெருமுனையில் முடங்கிய எனக்கு,
யார் அளிப்பார் ஆதரவு?
ஒருவேளை,
பழுப்பு சட்டையும்,
கருகிய நிறமும்,
சிக்கிய மயிரும்,
ஒழுகிய மூக்கும்,
இல்லாமல் இருந்தால்,
யாருடைய ஆதரவோ, எனக்கு கிட்டி இருக்குமோ?
தனித்து தவித்த அவளின் கனா வில்
திடுக்கி உதித்த செயலால்.,
ஐயமில்லா செல்ல ஆலயமும்,
தீட்டறியுமுண்டோ ?
மாரி அவளின் மகளாய், மாறி இருப்பின்?