வழியில்லா வலிகள்

எட்டு எட்டா எடுத்துவச்சு
எட்டணாவ சேர்க்கும் மக்கா
வட்டி வட்ட மயக்கத்தில
தொலைச்ச பணம் பத்தணா

நல்ல கஞ்சி குடிப்பதில்லை
நாலு காசு சேர்ப்பதில்லை
நல்ல உடை உடுப்பதில்லை
நாரப்பையா பேச்சு கேட்டு
நஷ்டத்தில நீ கிடக்குற

வட்டிக்கு விட்ட ராசா
வயிற்றை நீவுற லேசா
கஞ்சி போட்ட உடைபோட்டு
காஞ்சி போக செய்துபுட்டு
நாவடக்கமில்லாம
நக்கலாக பேசாத!!

உன்கடன வாங்கி
கட்டினானா கோட்டை-அட
வட்டி கட்டி கட்டி
ஆகிப் போனான் ஓட்டை!!

கெஞ்சி கெஞ்சி கொடுத்து
கொஞ்சி தொழிலா செஞ்சவனே
கஞ்சி இல்லா வீட்டிலதான்
உன் நெஞ்ச உயர்த்தி காட்டணுமா?!!

உழைக்கும் வர்க்கத்தின்
இரத்தத்தை சுரண்டி சுரண்டி
மண்ணுவாங்கி மாளிகை எழுப்பிட்ட
ஒட்டி கிடந்த வயிறா வந்து
கெட்டிக் காரனாயிட்ட !!

ஒன்ன போட்டு பாத்தா சேர்த்தும்
பத்தாதுன்னு பஞ்சா பறக்கிற நீ !
வட்டிக்கு வாங்கியவன்
நெஞ்ச பிளக்குற...!

குடும்பத்தோட சாவுங்கனு
நாகூசாம சொல்லுற
பிணமானா வருமா? பணமா?
நெற்றி வியர்வை சிந்தி
உழுது கிடந்தவனை
உசுப்பேத்தியவன் நீயே !

வளர்ந்த பயிறு கருகுச்சினா
வந்து உசுர வாங்குற
வருணன் வந்து பார்த்திருந்த
வட்டி என்ன குட்டி போட்டும்
கொடுத்திருப்போம்!

வராத வருணனால எமனாய் நீ
வந்தாயோ எம்வாசலுக்கு
உழுத கணக்கை ஒருநாளும்
பார்த்ததில்லை நாங்க
உனைப்போல கணக்கு பார்த்தா
உணவுக்கு எங்கே போவீங்க !!

காசு காசு காசுனு
பேயாட்டம் அலையிறியே
இயற்க்கை கொஞ்சம்
கணக்கு போட்ட எவனாலும் முடியுமா ?

மூச்சிழுக்கும் காற்றுக்கு காசு
கொட்டும் மழைக்கு காசு
மண் முட்டும் செடியெல்லாம் காசு
வருடும் தென்றலுக்கு காசு
கொடுக்கும் மனிதன் எவனிருக்கான்!!
இதற்க்கு மதிப்பு கூறிடவாவது முடியுமா ?

எழுதியவர் : கனகரத்தினம் (20-Jun-14, 1:38 am)
Tanglish : valiyillaa valikal
பார்வை : 227

மேலே