இந்தக் கால காதல்

இந்தக் கால
காதலில்
அன்பு.....
பாசம்.....
கருணை.....
எல்லாம்
காலில்
போட்டு
மிதித்துவிட்டு....
காமம்
களைகட்டி
நிற்குது....
கண்ட இடத்திலும்
கடை
போட்டு
விற்குது
கற்பையும்
கௌரவத்தையும்.....!!

காதல்
தப்பில்லை
காதலித்து தான்
தீரனும்
எனும்
தீர்மானமே
தப்பு.....வருவதை
ஏற்றுக்கொள்.....வதைக்காமல்......!!

கைபேசியில்
பொய்பேசி.....
பொய் முகங்களை
முகவரியாக்கி....
உல்லாசம்
செய்ய...
விலாசம்
தேடும்
சபல மனிதர்கள்
நிறைந்த
தேசம்
இது....

மனசு
போன இடமும்
மானம்
போன
இடமும்
புரியாமல்
மனைக்குள்
முடங்கும்
மனிதர்கள்
ஊர்மனைக்குள்
அதிகம்......

நகரத்து
வாழ்க்கை
நாகரிக
உச்சம்.....நாலாபுறமும்
அச்சம்....காதல்
இங்கேதான்
கழுத்தறுக்கப்
படுகிறது......
காப்பாற்ற
முடியாமல்.......

எழுதியவர் : thampu (20-Jun-14, 3:10 am)
பார்வை : 379

மேலே