கரண்டி - ஸ்பூன்

அம்மாவின்
கைகளுக்குப் பிறகு
அனைவருக்கும் சோர்
ஊட்டும் புதிய கை..

இன்று அம்மாவே
அருகில் இருந்தாலும்
சோர் ஊட்டுவது
இந்த கைதான்..

அன்று அடம்பிடிக்காமல்
சாப்பிட கையில் பொருள்
கொடுத்தாள், இன்று
கையில் ஏதேனும்
இருப்பதினால்
இந்த கரங்கள் நம்
கரம் பற்றுகின்றன...

ஐவிரலில் பிசைந்து,
அன்னை அமுதமாய்
ஊட்டிய உணவு..
அந்த அழகை
உணரக்கூட இன்று
நம் ஐவிரல்கல்
முயற்சிப்பதில்லை...

மாறி வரும்
கலாட்சாரத்திற்கு
நம்மையும், சில
விஞ்ஞான பொருள்களுக்கு
விரல்களையும் பறிகொடுத்ததால்....

................................................................

ஒரு சில கட்டாயங்களால்,
காரணங்களால் கரண்டியில்
சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு,
வருத்தங்களுடன்
எனது இந்த வரிகள்........

எழுதியவர் : சுகன் dhana (19-Jun-14, 9:06 pm)
பார்வை : 147

மேலே