பிரேசிலை பித்துபிடிக்க வைத்து உச்சத்தில் ஒச்சோவா மெக்ஸிக்கோ கோல் கீப்பர்

இரண்டு கம்பத்திற்க்கு நடுவே
இழுத்துப் பின்னிய வலையாய்
சிலந்தி மனிதன் ஒச்சோவா என்பதா?

கோல் போஸ்டில் ஒரு சுவராக இருந்து
கால்பந்து மோதி காணாமல் போனதால்
சீனத்து பெருஞ்சுவர் என்பதா??

மெக்சிக்கோ நாட்டினை துக்கடா என்று
சக்தியை குறைத்து மதித்திட்ட பிரேசில்
முட்டி மோதியும் சுவராக தடுத்திட்ட
ஒச்சோவா-வை உச்சத்தில் வைத்து
கச்சிதமாக பாரட்டிட வேண்டும்


(2014- உலக கால்பந்து தொடக்க ஆட்டத்தில் பிரேசிலை அலைக்கழித்த மெக்ஸிக்கோ கோல் கீப்பர் ஒச்சோவா விற்க்கு பாரட்டுப் புதுப்பா)

எழுதியவர் : (19-Jun-14, 10:41 pm)
பார்வை : 52

மேலே