அர்த்தமற்ற வாழ்க்கை
அலட்சியபார்வையில் அம்மா
அனாவசியமாய் அப்பா
ஒத்துவராத உறவில்
கணவனும் மனைவியும் ..........
மூன்றாவது உறவுகளாய் பிள்ளைகள்
ஊட்டி வளர்ப்பதற்கும்
உறக்கம் கொடுப்பதற்கும்
ஒப்பந்த தாய் ..........
கடமைக்காக வீடு
காலத்தை கழிக்க அலுவலகம்
உறவுகள் எல்லாம் தூரம் போய்
அங்கே துளிர்க்கிறது புது உறவுகள் ......
குடும்ப உறவுகளில்
விரிசல் தொடங்கி
அங்கே அலுவலகத்தில்
அடக்கமாய் அடங்கிக்கிடக்கிறது ........
கணவனுக்கு கட்டுபடாத மனைவியும்
மனைவியை மதிக்காத கணவனும்
பெற்றவரை மதிக்காத பிள்ளையும்
பிள்ளையை மதிக்காத பெற்றவர்களும் .......
அங்கே ,
கைகட்டி வாய்பொத்தி
யாரோ ஒருவரிடம் பணத்திற்காக
தன்மானத்தை அடகுவைத்து
தலைகுனிந்து கிடக்கின்றார்கள் .......
உறவுகளுக்கு கொடுக்காத
பணிவையும் பரிவையும்
பணத்துக்காக பணையம்
வைத்ததுதான் சாதனை .........
நிதிக்கான பயணத்தில்
நிம்மதியை தொலைத்து
குடும்ப வாழ்க்கையில்
குதூகலம் குறைந்ததுதான் மிச்சம் .......
அலுவலக அவல வாழ்க்கையில்
பெற்றவர்கள் பரிவு இல்லாமல்
பாதைமாறும் பிள்ளைகள்தான்
கோடான கோடிகள் .......
நிதியோட தேவைக்கு
நிம்மதியை அடகுவைத்து
விதியோட விளையாட்டை
விரும்பியே ஏற்கின்றான் ......
அளவில்லா ஆசைக்கு
அற்ப வாழ்க்கைக்கு
கற்ப்புகூட காணிக்கையாய்
போவதுதான் வேடிக்கை .......
பணம்தேடும் பயணத்தில்
பாசத்தை இழந்து
நடமாடும் பணமாக
மனிதனோ வாழுகின்றான் ............
கலிகால வாழ்க்கை முறையில்
வாழத் தெரியாதவனாகவே வசந்தத்தை இழந்து
அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து
போகிறான் மனிதன் ..