விடை கேட்டு தயங்கி நின்றேன்

விடை கேட்டு தயங்கி நின்றேன்
நான் போக முடியாமல் தவித்து
நின்றேன்
அவள் ஏக்கம் கண்களில், என் தயக்கம்
கால்களில்
கண்ணின் ஏக்கம், எந்தன் கால்களுக்கு
ஒரு செய்தி சொன்னது
அதனால் அந்த கால்களும் தயங்கி
நின்றது
அவள் கண்கள் விடை தராத
வரையில், என் கால்கள் நடந்திடாது
காதலிலே இது அற்புத காட்சி
எந்த ஓவியனும் சித்தரிக்க
கடினமான காட்சி