ஓடக்கார பெண்ணே
![](https://eluthu.com/images/loading.gif)
ஓடக்கார பெண்ணே, ஓடுமோ
இந்த ஓடம் அக்கரை வரையிலே?
பயணியே.... ஓடாது
மிதந்திடும், நான் துடுப்பு போட
துவங்கினாலே....!
ஓடுமோ, மிதக்குமோ?
சேர்க்குமோ என்னை அக்கரையிலே?
அக்கறையுடன் சேர்த்திடும்
உம்மை அக்கரைக்கே....!
அக்கறையும் மிகுந்தது, அந்த
பயணத்திலே
அதில் கொஞ்சம் சர்க்கரையும்
சேர்ந்தது, காதலாக அரும்பிடவே
இரு உள்ளங்களின் இடையே
அவனுக்கு இனி என்ன வேலை
அக்கரையிலே
திரும்பி வந்தான் இக்கரைக்கே,
அவளுடன் இணைந்து
வாழ்வதற்கே
எத்தனையோ பயணங்கள்
இருவரை இணைக்கின்றதே
அத்தனையும் நெஞ்சினிலே
இனிக்கின்றதே