உக்கிரம்

இருளின் உக்கிரத்தில் வளரும் நிசப்தம்
புதிய கவிதையென மூச்சுவிடுகிறது
மழலையின் உடல் மீது
ஊரும் எறும்பைப் போல துன்பத் திரட்சி
சிறைகளின் வெளி முழுதும்
அலறித் தகிக்கும் அகமருகே
ஒரு சாவின் முற்றம் விழிக்கிறது
என்னுடல் நோகும் கூக்குரல் சுழலில்
இயங்கிக் கொண்டிருக்கிறது
சிங்கத் துவக்கின் பின்பக்கம்
என் மூச்சுக் காற்றிலே
என்னையே அழிக்கும்
வரம் தேடிய குற்றுயிர் கணம்
சிவந்து மறைகிறது
இன்னுமே வலியடங்காது அசையுமென் நிழல்
ஆங்காங்கே மிதந்து வரும்
தசைகளோடு .
சிறு மவுனத்தில்
நெடுங்காலமாய் குமுறுகிறது

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (20-Jun-14, 3:47 pm)
Tanglish : ukkiram
பார்வை : 59

மேலே