மொழிகள் நம் எண்ணத்தை வெளியிடும் வழிகள்
மொழிகள்
அது தான் உள்ளத்தின்
எண்ணத்தை நாம்
வெளியிடும் வழிகள்
வழிகளை வளர்த்திட
வேண்டும், பிரிவினை
அதனுள் புகுத்திட
வேண்டாம்
என் மொழி எனக்கு
சிறந்தது தான்
அதன் சிறப்பை நான்
எடுத்து சொல்ல விரும்புவது
தான்
ஆனால் பன்மொழி கற்பதில்
தவறு இல்லை தான்
அது தந்திடும் தனி ஆற்றல்
கற்று தேர்ந்தவர்க்கு தான்
பிறர் மொழி வேறு, என்
மொழி வேறு என்று பாகுபாடு
வேண்டாம்,
பகுத்தறிவு வேண்டும்
இந்த தெளிவினை பெறுவதற்கே
மொழிகள் நம் எண்ணத்தை
வெளியிடும் வழிகள்,
அந்த வழிகளை வளருங்கள்
பாகுபடுத்தி கொல்லாதீர்கள்