வரவேற்ப்போம் மழையை

விண்ணிலிருந்து ஒரு தேவதை இறங்குகிறாள் தன அன்பை கொட்டித்தீர்க்க ....
சின்ன சின்ன தூரல்களால் சிறு குழந்தை போலே முத்தமிடுவாள் ...
வண்ண வண்ணமாய் நிறங்கள் காட்டி அன்பினை அவளே உணர்த்திடுவாள்....
பயம் காட்டுவாள், பாதுகாப்பாள் தன் வருகையினாலே பல உயிர்களை மகிழச்செய்வாள்
கடவுளாய் அவளை நாம் வணங்கினாலும் நாம் தோழி போலே நம்முடன் விளையாடுவாள் ...
பல்லுயிர் தம்மை பெருக்க செய்ய அவள் நம்முடனே வாழ்ந்திடுவாள்...
அவளை நாமும் வரவேற்க வீடு தோறும் வளர்ப்போம் ஒரு மரத்தை ...