நம்பிக்கை
நம்பிக்கைகள் வாழ்வின்
நட்சத்திரங்களே
தும்பிக்கையால் யானை
அனைத்தையும் சுளுவில்
தூக்கி எறிவது போல
தன்னம்பிக்கையால் நீ
சவால்களை தகர்த்திடலாம்
தவிடு பொடி ஆக்கிடலாம்
உலகினில் யார், எந்த
சக்தி வேண்டுமெனில்
உன்னை கை விடலாம்
ஆனால் உன்னம்பிக்கை
உன்னை காப்பாற்றும்
கரை சேர்க்கும்
நம்பிக்கையை தளர
விடாதே, யார் சொன்னாலும்
தளர்ந்திடாதே