என்ன இல்லை கொடுப்பதற்கு

அள்ளிக்கொடு உன் அளவற்ற அன்பினை உறவற்று தவிக்கும் உயிர்களிடத்தில்.
தட்டிக்கொடு வாழ்வில் முன்னேரும் மனிதர்களின் தோழ்களை.
குறல் கொடு உண்மைக்குப்போறாடும் உணர்வுகளுக்கு.
உன் இரத்தத்தை உறிஞ்சி கொடு இரத்தம் கொட்டி தவிக்கும் உயிருக்கு.
நீ பிணமாக போகிறாய் என்று தெரிந்தால் உடனே வெட்டி கொடு உன் இதயத்தினை.
கண்களை தோண்டிக்கொடு காணுதல் இன்றி சாதல் குறையும்.
உன் உயிர் பிரிந்த போதும் பிற உயிர்கள் உயிர்பிடிக்க உன்
உறுப்புகள் ஒவ்வொன்றையும் பிய்த்துக்கொடு.
கொடு கொடு அனைத்தையும் கொடு
என்ன இல்லை கொடுப்பதற்கு உன்னிடத்தில்...

எழுதியவர் : ஆ.சத்திய பிரபு. (22-Jun-14, 9:22 am)
பார்வை : 46

மேலே