இலக்கியக் காதல்

தோகையர் விழிகள் கவிந்திட
மனதில் மலரும் காதல் !
மேகங்கள் வானில் கவிந்திட
மண்ணில் தவழும் நதியின் காதல் !
விரல்கள் நரம்பினில் தடவிட
வீணையில் தவழும் இசையின் காதல்
தென்றல் பூக்களைத் தழுவிட
பூங்காவில் மலரும் புதுமலர்க் காதல் !
ஆதவன் மேற்கு வானில் விடை பெற
அந்தியில் மயங்கிடும் காதல் !
பக்தன் பக்தியில் கைகூப்பி உருகிட
உள்ளத்தில் பொங்கிடும் தெய்வீகக் காதல் !
இதயத்தை இயற்கை அழகினில் இழந்திட
கவிஞனில் மலரும் கவிதைக் காதல் !
கவிதைகள் கருத்துக்கள் கலந்து உறவாடிட
இதயத்தில் பெருகிடும் இலக்கியக் காதல் !
காதல் இனிது கண்களில்
காதல் இனிது கவிதையில்
காதல் இனிது மொழியற்ற மௌனத்தில்
காதல் இனிது உன்னிலும் என்னிலும்
உள்ளத்தின் ஓசையற்ற உணர்விலும்
அந்தி மயங்கும் அந்த வானிலும் !
-----கவின் சாரலன்