விடிவெள்ளியாய் வந்துவிடு
நொடியு முனைப்பிரி யேனென
பொடிவைத் தேதினம் பேசினாய் - நீ
வடித்த கவிகள் ஏராளம்
படிக்க படிக்கத் தேனூறும் !!
இடிபோல் மறக்கச் சொல்லியே
ஒடித்து விட்டாய் என்மனதை
கடிவா ளமற்ற புரவியாய் - நீயும்
பிடிவா தங்கொண் டோடுகிறாய் !!
துடிக்கத் தெரிந்த இதயத்திற்கு
நடிக்கச் சொல்லித் தந்ததில்லை
வெடித்து உள்ளம் சிதறுமுனே
அடிபெண்ணே நீயும் சம்மதிப்பாய் !!
கொடிபிடித்துப் போராட வில்லை
குடித்தாடும் எண்ணமு மில்லை
முடிவாய் உன்னிடம் யாசிக்கிறேன்
விடிவெள்ளி யாய்வாழ்வில் வந்துவிடு !!!