காதல் பிரிவு கவிதை
அவள் தொலைந்து
போயிருந்தால் நான்
கவலை படமாட்டேன்
தொலைந்து போனதும்
என் இதயம் தான் ....!!!
நினைவுகளை தராமல்
என் கனவுகளை கெடுக்காமல்
வெறும் இதயத்தை தொலைத்து
இருந்தால் போகட்டும் விடு
என்று விட்டிருப்பேன் ...!!!
கூறான பார்வையால் என்னை
காயப்படுத்தி ....
மென்மையான குரலால் என்னை
சேதப்படுத்தி.....
மயக்கமான மொழியால் என்னை
வசப்படுத்தி ....
இப்போ தனிமையில் என்னை
தவிக்க விட்டு சென்று விட்டால்
தேடுகிறேன் அவளை ....!!!