என் காதலியை காணவில்லை
சின்ன
ஒரு கருத்து வேறுபாடு ...
ஒரு நாளாய் பலமணி
நேரமாய் அவளை..
காணவில்லை கண்டவர்கள் .....
சொல்லுங்கள்...!!!
என்னவளின்
அங்க அடையாளம் ...
அவள் சிரித்தால் நீங்கள்
சின்னாபின்னம் ஆவீர்கள்..
சிரித்துவிட்டாள் என்று
சேட்டை விட்டால் செருப்படி..
வாங்குவீர்கள்....!!!
கடைசியாக அவள் போட்ட
ஆடை ரோஜா நிற சுடிதார்
தொட்டு விடாதீர்கள்..
அவள் நகங்கள் முற்கள்..
அவள் கண்கள் தீ பந்தம்...!!!
நிச்சயமாய் என்னை விட்டு
பிரியமாட்டாள் - சில வேளை
ஏதாவது ஒரு மூளையில்
தன் இதயத்தை பிடுங்கி வைத்து
கொண்டு அழுது கொண்டு.
இருப்பாள் தன் தவறை
உணர்ந்து ......!!!