சின்னத்திரை பெரிய திரை

காலை முதல் மாலை வரை
சின்னத்திரை பெரிய திரை
விளையாடுது ஒரு வண்ணக்கதை
சிறியோர் முதல் பெரியோர் வரை

அம்மா கையில் சிறு கத்தி
காய்கறிகள் கோப்பையில் வெட்டி
கண்கள் இரண்டும் கண்ணீர் ததும்மி
அழுகிறார் சின்னத்திரை முன்னே

படிச்சி முடிச்சி பல காலம்
வேலை தேடி அழுத்துப்போய்
மதிய நேரம் மல்லாக்க படுத்து
பாட்டு கேட்டு காலால் தாளம் போடும்
தங்கையும் இங்கே

ஊர் சுற்றி உலகம் சுற்றி
தந்தையில்லா நேரம் பார்த்து
தந்திரமாய் உள்ளே வந்து
திண்ணும் நேரம் தித்திப்பாயிருக்க
கப்டன் படம் பார்க்கும்
தம்பி இங்கே

பொக்கை வாயோடும்
கையில் உலக்கையோடும்
தாளம் போட்டு தேவ கீதம் கேட்கும்
என் பாட்டி இங்கே

உழைப்பின் களைப்பை மறக்க
உறங்க முன் உதிரம் கொதிக்க
அவன் இவன் உதைக்கும்
திரைப்படம் பார்க்கும்
தந்தையும் இங்கே

இத்தனைக்கும் ஒரு பெட்டியில்
அவர் அவர் இரசனைக்கு
நிலையங்கள் தேடையில்
அவர் அவர் பிடிக்கும்
சண்டைகளும் அங்கே

எழுதியவர் : நுஸ்கி மு.இமு (22-Jun-14, 6:06 pm)
பார்வை : 108

மேலே