ரமலானே வருக

புனித ரமலான் !

ஷாபான் கடந்ததும் ரமலான் வந்திடும்
புண்ணியம் தேடும் புனித மாதம் இது

பசித்திருந்து விழித்திருந்து இன்னும்
படைத்தவனை நின்று வணங்கி

நம் பாவங்கள் போக்க துவா கேட்க
பன்மடங்கு நன்மை பெற்று தர

வந்தது நமக்கு புனித ரமலான் நோன்பு
தந்திடும் மனம் நிறைவாய் கொண்டு

மூடப்பட்ட நரகம் ரமலான் முழுதும்
கட்டப்பட்ட செய்தானின் நிலையும்

வணக்கங்களுக்கு பன் மடங்கு கூலி
வான்மறை ஓதி சிரம் தாழ்ந்து கேளு

தராவீக் தொழுகையில் தவறாமல் நின்று
லைலத்துல் கதிரின் மகத்துவத்தை பெற்று

கேட்கும் நம் துவாவை மலக்குமார்கள்
படைத்தவனிடம் பரிந்துரைக்கும் மாதம்

எங்கள் இறைவனே !

இந்த புனித ரமலானின் மேன்மையை
தந்து எமக்கு பாவங்களை மன்னித்து
நிறைவருள் தருவாய் ரஹுமானே !

கவிஞர்: மு.அ.காதர்.

எழுதியவர் : கவிஞர்: மு.அ.காதர். (23-Jun-14, 7:24 am)
பார்வை : 466

மேலே