எழுத்து காம்
மாறிடும் உலகில் மாற்றங்கள் தேவையே
மாற்றங்கள் பதிந்திட நாட்கள் தேவையே !
மாற்றம் மகிழ்வே நாம்வசிக்கும் தளத்தில்
மாற்றிய விதத்தால் மிளிர்கிறது தளமும் !
மாற்றிடும் நேரத்தில் கேட்கலாம் கருத்தை
தேற்றிடும் எங்களை தோன்றிடும் புதுமை !
பலபல பளிச்சென புரிகிறது பார்வைக்கு
சிலசில சிக்கலாய் சிந்தையில் படுகிறது !
பகிர்கின்றனர் கருத்தை பலரும் இங்கே
பட்டென சொல்லிடும் நல்ல இதயங்கள் !
நல்லதென கொள்க நீங்களும் கருத்தாய்
நவில்வதை ஆய்ந்து மாற்றிடுக அழகாய் !
முடிசூடா மன்னன் கணினியில் நம்தளமே
முந்துகிறது முதலாய் இணைய தளத்திலே !
இணைகிறது இதயங்கள் தமிழ்மீது காதலால் !
இடிசத்தமும் கேட்கிறது கருத்து மோதலால் !
வாசிப்போம் நாமும் நாளும் படைப்புகளை
சுவாசிப்போம் நம் தமிழை நற்சுவையுடன் !
வாழ்த்திடுவோம் நம் தளத்தை வாருங்கள்
வாழ்ந்திடுவோம் நாமும் நம் தளத்தினிலே !
பழனி குமார்