முதின்மப் பதின்மம்

பதின்ம வயதில் உனக்கு
கிழவியும் சரி
முதின்ம வயதில் உனக்கு
குமரியும் பிழை

பெண்தேடி பதினெட்டில் நீ
பணம் கொடுத்தாய்
பெண்தேடி முப்பத்தெட்டில் நீ
பணம் எடுத்தாய்

வயதுக்குநீ வந்ததும் பெண்ணாசை
மட்டும் இருந்தது
வயதுனக்கு வந்ததும் பொன்னாசை
கிட்ட இருந்தது

வருமானமில்லா உன் வயதுகளில்
வரும் மானம் இருந்தது
வருமானம் உள்ள வயதில் உனக்கு
மானம் வராமல் இருந்தது

அனுபவம் இல்லாத வயதில்
பாவம் அணுவாய் செய்தாய்
அனுபவம் உள்ள வயதில்
அணுவணுவாய் பாவம் செய்தாய்

கூரிய வயதில் நல்லது உனக்கு
கூறியது வாய்
ஏறிய வயதில் மெல்லதாய் உனக்கு
நாறியது வாய்

எழுதியவர் : மது மதி (23-Jun-14, 3:38 pm)
பார்வை : 86

மேலே