வளர்ந்து வரும் விஞ்ஞானம்

நம்ம நண்பர் ஒருவர் அடிகடி விஞ்ஞானம் பற்றியியே எப்போதும் பேசிகொண்டிருப்பார், அவர் ஒரு சமயம் மதுரைக்கு சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்டார், ரயில் பெட்டியில் மேல் படுகையில் படுத்து கொண்டார், ரயில் விழுப்புரம் சந்திப்பில் நிற்க நம்மவர் இறங்கி தேனீர் அருந்த சென்றார். அங்கே எதிர்புறம் சென்னை செல்லும் வண்டியும் இருக்க நம்மவர் தூக்க கலகத்தில் மீண்டும் சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார் ரயில் புறப்பட்டது.அவர் எப்போதும் போல் ஒரு பெட்டியில் மேல் படுக்கை காலியாக இருக்க ஏறி படுத்துக்கொண்டார், இப்போது நடு படுகையில் எதிர் எதிர் படுகையிலிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள், அண்ணே வண்டி எப்போண்ணே சென்னைக்கு போகும். எதிர் நபர் காலையில் நான்கு போய்யிடும் சொல்ல. உடனே நம்மவர் "அட விஞ்ஞானம் எவ்வளவு வளந்துடுச்சி பாருங்க" என்றார், எப்படி சொல்றிங்கனு மற்றவர் கேட்க, நம்மவர் சொன்னார் " பாருங்கண்ணே மேல் பர்த் மதுரை போகுது கீழ் பர்த் சென்னைக்கு போகுது, விஞ்ஞானம் எப்படி வளந்துடுசி...........

எழுதியவர் : (24-Jun-14, 4:34 pm)
பார்வை : 141

சிறந்த நகைச்சுவைகள்

மேலே