துளி மழை-3
*
எனக்கு
மழையில் நனைய
பிடிக்காது
என்று சொல்பவர்களுக்கு
இதழ் முத்தம்
கொடுக்க தெரியாது
என்பது
மழைதீகம்!
*
மழை
பிடிக்கும்
ஆனாலும்
குடை பிடித்து செல்வேன்
எனச்சொல்வோர்க்கு
ஸ்பரிசங்கள்
பற்றிய
மெல்லியல்
தெரிவதற்கில்லை
*
லேசான
மழையில்
நனைந்து வர
பிடிக்கும்
என்பவர்களிடம்
மிக ஜாக்கிரதை
உங்களின்
விழி நீண்ட பார்வையில்
ஊடுருவி செல்லும்
வல்லமை படைத்தவர்கள்
என்னைப்போல
*