மணபந்தல்

பெண் வீட்டார் அவசரமாக கோவிலுக்கு கலம்பிகொண்டு இருந்தார்கள். காதலிக்க தெரியாத பெண் அவள். ஆனால் இப்போது அவளுக்கு கல்யாணமே நடக்க போகிறது.
மாலையும் கையுமாக நின்றுகொண்டிருந்த ராசாத்திக்கு ஒன்றும் புரியவில்லை. ஆயிரம் கேள்விகள் மனதில் ஓடியது. அப்பா,அம்மா, அண்ணன் யாரும் இவளிடம் மாபிள்ளையை பற்றி கேட்கவே இல்லை. என்னவோ நடக்கட்டும் என நினைத்து அவளும் அமைதியா இருந்தாள். பேருந்தில் பயணம் ஆரம்பித்தது.

ராசாத்தியின் கல்யாணத்திற்கு பழனிசாமி கலம்பிக்கொண்டு இருந்தார்.
'என்னடா பழனி நீ என்னமோ மாப்பிள்ளை மாறி போற?' என ராமு கேட்டான்

'ஏன்டா எனக்கு என்ன கொறச்சல்? நான் போனா பொன்னே என் பின்னாடி ஓடிவந்துரும்'

'ஆமா ஆமா.. இவன் அழகு-னு நெனப்பு. நெனப்பு தான் பொலப்ப கெடுத்துச்சாம்.. உங்க அப்பா எங்கடா?'
'அவரு நேத்தே பொண்ணு வீட்டுக்கு போனாரு டா . என்ன இப்போ வரசொன்னாரு'
'சரி சீக்கிரமா வந்து சேறு'

பழனிசாமி பயணித்து கொண்டிருந்த வேலையில் அங்கே...

'தம்பி பொண்ணு வீட்டு ஆளுங்க எத்தன பேருன்னு பாரு.. அவங்களுக்கு மாப்பிள்ளை வீடு தான் டிக்கெட் போடணும் நம்ம ooru வழக்கபடி ' என்று பெண்ணின் அண்ணனிடம் சின்னசாமி சொன்னார். இவர் பழனிசாமி-இன் தந்தை.
மாப்பிள்ளையின் அக்கா 'டிக்கெட் போட கூட பொண்ணு வீட்டுகாரவங்களுக்கு காசு இல்லையா?'
என சுருக்கென்று கேட்டு விட்டார்..
அவ்வளவு தான் சின்னசாமி கோவமாகி விட்டார்
மாப்பிள்ளை வீட்டாரின் நக்கலான கேள்வியால் கோவம் கொண்ட சின்னசாமி,
'இப்பவே இப்படி கணக்கு பாக்குரின்களே அப்பறம் எப்படி எங்க பொண்ண வச்சு சோறு போடுவிங்க?' என்றார்.
வார்த்தைக்கு வார்த்தை, பதிலுக்கு பதிலுமாய் கல்யாண விசேசம் சண்டையில் முடிந்தது. கடைசி வரை கோவிலுக்கு போகாமல் பேருந்து பயணம் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலேயே முடிவு பெற்றது.
ராசாத்தியோ அழுதுகொண்டு நிற்க அவளை சுற்றி வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது. ராஜாத்தியின் அப்பா மருதை, அண்ணன் பவுன்ராஜ் இருவரும் செய்வதறியாது, மாப்பிள்ளை வீட்டாரையும், சின்னசாமியையும் சமாதானம் செய்தனர் ஆனால் முடியவில்லை.

சிறிது நேரத்தில் பழனிசாமி அங்கே வந்து சேர்ந்தான். என்ன நடக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.
ராசாத்தியின் பின் நின்று
'கவலை படாத கல்யாணம் நல்லபடியா நடக்கும்' என்றான்.
அவளுக்கோ இவன் யாருடா லூசு மாறி பேசுறான் என நினைக்க தோணியது.

வெகு நேரமாக சண்டை முடியாததால் சின்னசாமி ஒரு முடிவுக்கு வந்தார்.
'மருதை அது எங்க வீட்டுக்கு வர பொண்ணு. என் மகனுக்கு உன் மகளை கட்டிகுடு' என்றார்
பழனிச்சாமிக்கு ஒரு பக்கம் சந்தோசமும் மறுபக்கம் பயமும் சுற்றிக்கொண்டது.
திருவிழாவில் ராசாத்தியை பார்த்திருக்கிறான். கல்யாணம் செய்துகொள்ள ஆசையும் இருக்கிறது. . இறுதியில் பழனிச்சாமிக்கும் ராசாத்திக்கும் கல்யாணம் நடந்தது.
ராமுவை மனதில் நினைத்துக்கொண்டான் பழனிசாமி.

எழுதியவர் : உமாபிரியதரிசினி (25-Jun-14, 12:02 pm)
சேர்த்தது : priyatharisini
பார்வை : 232

மேலே