தற்கொலை தற்கொலையானது
தற்கொலை தற்கொலையானது
சிவராஜ் படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காமல் ஊரை சுற்றும் வேலையை செய்து வந்தான். வீட்டில் தினமும் திட்டுவங்குவதும் ஒரு வேலை தான் அவனுக்கு.
இப்படியே சென்றுக் கொண்டிருந்த அவன் வாழ்க்கை (வாழ்க்கையேயில்லை) அவனுக்கு பிடுக்கவே இல்லை.
உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து ஊரின் எல்லைக்கு சென்று மருந்தை அருந்த தயாராக இருந்து சில நிமிடங்கள் நினைத்தான் தன் குடும்பத்தை
இவ்ளோ நாள் எல்லோரும் திட்டினார்களே ஆனால் யாருமே அழுகவில்லையே கண்ணீர் சிந்தி பொலம்பவில்லையே நான் இறந்ததை கேட்டால் தந்தை மனமுடைந்து போயிடுவாரே
தாய் நினைத்து நினைத்து உயிரை விடுவாளே
அக்கா பதறி விடுவாளே
தங்கை தவித்து விடுவாளே
அண்ணன் மனதிற்குள்ளே மனமுடைந்து விடுவானே...
நான் சாகமாட்டேன் என மனதை மாற்றி வீட்டிற்கு செல்கிறான் ...
தெரிந்த சில வேலைகளை செய்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறான் ...
தற்கொலை செய்யுமுன் தாய் தந்தை கூட பிறந்தவங்களை நினைங்க ... தற்கொலையும் சாகும்...
ராஜசுதன்