காதலெனும் மந்திரம்

மெல்லன மலர்ந்திடும் காதல்
ஒருநாள்
பில்லியன் மலர்களும் பூத்திடும்
அந்நாள்

சொல்லாமல் இருக்க முடியாது
உன்னால்
சொல்ல வார்த்தைகளும் கிடைக்காது
நாவால்

இதயமும்
ஒரு கோடி முறை துடித்தும் இன்னும்
உயிர்வாயு கேட்கும்
உயிர் இருந்தும் இல்லாதவனாய்
உன்னை சாய்க்கும்

விண்மீன்கள் பறித்திடும் தினம்
உன் கண்கள்
அதை பிழிந்து
அவள் இரு விழிகள் செதிக்கிடும்
உன் கனவுகள்

செவ்விள நீர் பருகியும் உன் தாகம்
உன் தொண்டையை இறுக்கி கட்டும்
குப்புற படுத்தும் உன் தூக்கம்
ஏனோ உனக்கு
சிவப்பு கொடியே காட்டும்

இரவுகளும் இடையூராய் மாறும்
உறவுகளே உனக்கில்லை என்று தோன்றும்
அவளை மட்டும் மனம் உன் உறவாய் பார்க்கும்
அவளிடமே சரணடைய ஏங்கும்

தாய் மடியும் ஒரு நாள் கசக்கும்
தாரமது சேர்ந்திடவே
உள்மனமும் உட்கார்ந்து கொள்ளும்
உண்மை அது நீ உணரா வரை
உயிர்கொல்லியாய் அது
உன் நாளமெங்கும் உன் உயிர் துடிப்பாய் கேட்கும்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (25-Jun-14, 2:03 pm)
பார்வை : 55

மேலே