வெற்றி உன் வீடு வரும்
தோல்வி
உன்னை துரத்தும்
துவண்டுவிடாதே ...
வெற்றியின் விளிம்பு நோக்கி
தடங்களில் தைரியம் வை ...
நம்பிக்கை சிறகு பூட்டு
நாளைய விடியலுக்காய் ..
இப்போதே சூரியனை எழுப்பு ..
மலையே எதிர் நின்றாலும்
முலையாய் கிள்ளி ஏறி ..
முடியும் என்ற காற்றை
மூச்சாக்கு..
போராடு ..
சுக துக்கங்களுக்கு விடுப்பு கொடு ..
உறுப்புகளுக்கு
ஓய்வுகொடுக்க
சிலமணிநேரம் தூங்கு ..
பார்வையை விசாலாமக்கு...
பனித்துளி நீஎன்றாலும்
தீப்பொறியாக்க
தினசரி பயிற்சி எடு ..
தூங்கும் போதும்
நாளைய சிந்தனையை
எழுப்பி விடு ..
நேரத்தை
விரயமிடாமல்
விதைகளிடு...
சாவு வரும் வரை
சாதனையின் கதவு தட்டு...
எதையும் எதிர்கொள் ..
துணிவை எப்போதும்
உன் துணையாக்கு ..
ஜெயிக்கும் வரை
உற்சாகத்தை உடலில் பொருத்து..
ஓடு... உழை .. உறுதியாயிரு
காலத்தின் கடைசி நொடி வரை ..
வெற்றி உன் வீடு தேடி வரும் .!!