நிம்மதி இல்லை
நிம்மதி இல்லை. ..
திங்கள் சிரித்திடும் போதும்
தென்றல் உரசிடும் போதும்
அலைகள் தாலாட்டும் போதும்
எல்லாமே நீயாய் தெரிகிறாய்!
நீ தலைகோதும் சுகத்தில் என்
தாய்மடி உணர்ந்தேனடா. ...
நீ இல்லாத ஒரு நாள்
நித்திரையிழந்து தவிக்கிறேனடா...
உன் நினைவுகள் வந்திங்கு
என் நெஞ்சமதை அடைக்குதடா. ..
நீ இன்றி இங்கெதுவும்
நிம்மதி இல்லையடா. ...
வாழ்வோ சாவோ உன்
மடி வேணுமடா
என வார்த்தையின் சத்தியம்
உனக்கது புரியுமடா. ...