உனக்குள் கரைந்து

இமைகள் தழுவ
இடைவேளை தா
சதா உன்
நினைவுகளில் சஞ்சரித்து
கிடக்கும் மனசு
கண்கள் மூட
தடை போட்டது போதும்.

மூளையின் முக்கிய பகுதியை
முற்றுகையிட உன்
நினைவுகள்
என் ஆளுமையை
அடிமைபடுத்தி
நாடியில் நங்கூரம் பாய்ச்சி
ஆழமாய்
என்னுள்
அகழ்வாராய்ச்சி
செய்து
புதுசாக எதையும்
கண்டெடுக்கப் போவதில்லை

மூலை முடுக்கெல்லாம்
மூடு பனி போல்
நீ....நீ மட்டுமே

சுதேசியாக இருந்தவன்
சுயமாய் எந்த முடிவையும்
எடுக்க முடியவில்லை
காரணம்
என்னை கட்டி போட்டிருக்கும்
உன் சிந்தனை
மாற்று சிந்தனையை
நெட்டி தள்ளிவிடுகிறதே!

இப்படி பாதி கழிந்துவிட்டது
என் வாழ்க்கை
மீதி நாட்களை
ஜோதியில் கலந்த சருகு போல
உன் நினைவுகளிலேயே
கழித்துவிட்டு
போகிறேன்.

அது இருக்கட்டும்
நீ எங்கு இருக்கிறாய் பெண்ணே.........!
என்னை நினைவிருக்கிறதா?????

எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (25-Jun-14, 3:10 pm)
Tanglish : unakkul karainthu
பார்வை : 66

மேலே