உலாவுவது எல்லாமே

உலகப்பந்தில்
மனிதன் எனும் பூக்காடு
தீக்காடாகிறது.

இதயம் எனும்
இறைச்சித்துண்டு
இரும்பாகிறது

இரத்தம்
நரம்பு
சதையால்
மனிதன் இருந்திருந்தால்
இரக்கமும் கூட இருக்கும்

தலையை அறுத்து
குருதி குடிக்கும்
கூட்டத்திற்குள்
மனிதனாக நானும்
மாட்டிக்கொண்டேன் !

என் இனம் தேடுகிறேன்
எல்லா திசையிலும்
குருதி பிசாசுகளின்
குடியிருப்புக்களே!

வெண்புறாக்களை
விழிகள் காணவில்லை
வேட்டை நாய்களும்
வெறிப்பேய்களும்
கூட்டமாக உலாவுகிறது
உலகம் முழுவதும்
பௌத்த நாட்டிலும் கூட!

எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (25-Jun-14, 8:00 pm)
பார்வை : 53

மேலே