நீ எங்கே என் அன்பே

நீ எங்கே என் அன்பே!!!

நீ இல்லாத இத்தனை நாட்களும்
எத்தனை யுகமாய் கடக்கிறது...

நீயும் நானும் சென்று வந்த பாதைகளில்
நீ இல்லை
தடங்கள் மட்டுமே...

நெஞ்சம் கனத்த எனக்கு
கண்ணீர் மட்டுமே காணிக்கையாய்...

உன் பிரிவை எண்ணி ஏங்கும் எனக்கு
உன் குரல் மட்டுமே பரிசாய்...

காலையில் கண் விழித்தால்
நீ!!!
இமை மூடி திறந்தால்
மறைந்து விடுகிறாய்!!!
என் விழி நீர் உனக்கு விளையாட்டாய்...

நீ விட்டு சென்ற ஒவ்வொன்றும் கேட்கிறது
நீ எங்கே என்று!!!

உன் நிழலை மட்டுமே குடித்து
உயிர் வாழ்கிறேன்
என் கண்களுக்கு விருந்து எப்போது ???

நீ என்னை மட்டும் காதலிக்கிறாய் என்று நினைத்தேன்
இல்லை
நம் பிரிவையும் !!!

உன் முத்தத்தின் ஈரப்பதம்
காய்வதற்குள்
சென்று விடாதே.....

என் உடம்பின் ஒவ்வொரு செல்லும்
ஆர்பரிக்கும் அந்நாள்
உன்
வருகைக்காக காத்திருக்கும்
நானும் என் நினைவுகளும்!!!

(இன்று என்னவனின் பிறந்தநாள்)

எழுதியவர் : Rubella (25-Jun-14, 9:40 pm)
Tanglish : nee engae en annpae
பார்வை : 555

மேலே