மலர் தேவதையே

முதல்பூ முல்லைபூ
உன் புன்னகை இதழ்களில்
இரண்டாம்பூ மல்லிகைபூ
உன் கரிய கூந்தலில்
மூன்றாம் பூ ரோஜாபூ
உன் அழகிய மேனியில்
நான்காம் பூ காந்தள்பூ
உன் கை விரல்களில்
ஐந்தாம்பூ தாமரைபூ
உன் செம்மலரடிகளில்
அதில் சமர்பிக்கிறேன்
என் காதல் கவிதைப்பூ
மலர் தேவதையே !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jun-14, 10:07 pm)
Tanglish : malar thevathaiye
பார்வை : 341

மேலே