வாழ்க்கை

இமைகள் மூடும் நேரமிது,
உறக்கம் ஏனோ வரவில்லை!
சுற்றம் வேண்டும் நேரமிது,
சுற்றி இங்கே யாருமில்லை!
காற்றில் பறக்கும் நேரமிது,
சிறகுகள் ஏனோ விரியவில்லை!
பலம் இழக்கும் நேரமிது,
பாரம் இறக்க இடமில்லை!
கண்கள் கலங்கும் நேரமிது,
கண்ணீர் ஏனோ சுரக்கவில்லை!
ஓய்வது தேடும் நேரமிது,
ஒளிவது எங்கே தெரியவில்லை!
ஓலம் கூட்டும் நேரமிது,
இதழ்களும் ஏனோ பிரியவில்லை!
இதயம் வெடிக்கும் நேரமிது,
இதுவும் ஏனோ ஒப்பவில்லை!
மண்ணுக்குள் புதையும் நேரமிதோ?
மனதிற்கு ஏதோ புரியவில்லை