பல் வலி

பல் வலி

ஒருத்தர் பல் வலின்னு டாக்டரிடம் போனார் . ”பல்லைப் பிடுங்கித்தான் ஆகணும். வலிக்காம இருக்க மயக்க மருந்து ஊசி போடறேன்” என்றார் டாக்டர்.

“அதெல்லாம் வேண்டாம் டாக்டர். எனக்கு குடிப் பழக்கம் உண்டு. அப்புறம் நிறையத் தைரியம் வந்திடும். நீங்க பல்லைப் பிடுங்கிக்கலாம்” என்று கூற டாக்டர் அவர் வழியிலேயே விட்டுட்டார். அவரும் வெளியே போய் தண்ணி அடித்தார் .எப்போதும் ஆஃப்அடிப்பவர் . அன்றைக்கு ஃபுல்லா போட்டு விட்டார் . ஆஃப் ஆயிட்டார் . தள்ளாடிக்கிட்டே வந்து நாற்காலியிலே உட்கார்ந்தார் .

”தைரியம் வந்திடுச்சா” ன்னார் டாக்டர்.

“ஏகப்பட்ட தைரியம் வந்துடுச்சி டாக்டர்” அப்படின்னு போதையிலே உளறினார் .

”ஏகப்பட்ட தைரியம்னா ?” ன்னார்.

“எந்தப் பய என் பல்லுல கை வைக்கிறான்” னு பார்க்கிறேன் என்று கூற . டாக்டர் ஆடிப்போயிட்டார்.

எழுதியவர் : சிவநாதன் (26-Jun-14, 8:10 am)
Tanglish : pal vali
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே