காணொளித் தாலி
தாத்தா:
என்னடா கேமராவுக்கு முன்னாடி சடங்கெல்லாம் நடக்குது. போண்ணு மட்டும் இங்க இருக்கா. மாப்பிள்ள இன்னும் வரல. அமெரிக்காவிலெ இருக்கானாம். காலைலெ முகூர்த்துக்குள்ள வந்திருவானா.
பேரன்:
தாத்தா. சென்னையிலெ இருந்துட்டே கன்னியாகுமரிலெ இருக்கற அலுவலகத்தை அங்கெ போகாம திற்ந்து வைக்கறாங்க. அது மாதிரி இதும் காணொளி கல்யாணம். மாப்பிள்ள அமெரிக்காவிலெ இருந்திட்டே இங்கெ நம்ம காட்டுக் கொட்டாயிலெ நடக்கற கல்யாணத்திலெ பொண்ணுக்கு காணொளித் தாலி கட்டுவாரு.
தாத்தா: .......??????