மாத்திரை

ஒரு டாக்டர் வயதைக் குறைக்கிற மாத்திரை கண்டு பிடித்திருந்தார் . மாத்திரை விலைமிக அதிகம் .ஒரு பணக்காரப் பெண்ணுக்கு தன்னோட வயசைக் குறைத்துக் காட்ட ஆசை. நிறையப் பணம் கொடுத்து முப்பது மாத்திரை கொண்ட ஒரு டப்பா வாங்கினார் . எதுக்கும் இருக்கட்டுமேன்னு இன்னும் இரண்டு டப்பா சேர்த்து வாங்கி விட்டார் . தினம் ஒரு மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே வந்தார் . 30 நாள் முடிஞ்சதும் 50 வயசுக்காரியான அந்தம்மா 20 வயசு இளம் பெண்ணா மாறி விட்டார் .அவர் சில நாட் கழித்து டாக்டரை பார்க்கவந்தார் .

”நீங்க யாரு ?” ன்னாரு டாக்டர்.

”வயசு குறைக்கிற மாத்திரை வாங்கிட்டுப் போனது நான் தான். மாத்திரை ரொம்ப எஃபக்டிவா வேலை செஞ்சிருக்கு.”

”அப்படியா, ரொம்ப சந்தோஷம் உங்க இடுப்பிலே இருக்கிற குழந்தை யாரு?” ன்னாரு டாக்டர்.

”அவர்தான் டாக்டர் என் ஹஸ்பெண்ட் எனக்குத் தெரியாம தினம் ரெண்டு மாத்திரையாத் தின்னுருக்கார். இப்படிக் குழந்தை ஆயிட்டார். இப்போ அவர் வயசைக் கூட்டறதுக்கு ஏதாவது மாத்திரை இருக்கா?” என்று கேட்டாராம்.

இப்படி ஒரு பிரச்சினை வரும்னு டாக்டர் எதிர்பார்க்கவே இல்லை.

எழுதியவர் : (26-Jun-14, 9:14 am)
Tanglish : matthirai
பார்வை : 149

மேலே