அருகே நீ இருந்தும் வேற்றுலகில் தேடுகிறேன் - சிஎம்ஜேசு

தாயாகி நீ என்னை ஈன்றருளினாய்
சேயாகி நான் உன்னைத் தேடுகின்றேன்

தந்தையாகி நீ எனக்கு தோழமை தந்தாய்
விந்தையாகி நான் உன்னை யார் நீ என்றேன்

நண்பனாகி நீ எனக்கு உதவிகள் புரிந்தாய்
அன்பனாக நடித்து நான் உன்னை அலயவிட்டேன்

உற்றாராய் சுற்றாராய் நீ இருந்தும்
இல்லாத உருவுக்கு இலை வைத்தேன்

கலையாய் காவியமாய் நீ இருந்தும்
உன்னைப் படிக்காமல் இன்னும் என்னில்

சுயநலம் தேடுகிறேன் உன்னைப் பார்க்காமல்

எழுதியவர் : சி. எம் .ஜேசு (26-Jun-14, 10:39 pm)
பார்வை : 81

மேலே