ரத்த தானத்திற்கு

பேசாமல் இருந்து
உண்ணாமல் இருந்து
கல்லூரி செல்லாமல் இருந்து
அழுது புரண்டு
அலுத்து சலித்து
பிடிவாதமாக
இரு சக்கர வாகனம் வாங்கியது
இதற்காகத்தானா??

தார்ச் சாலையில்
ரத்த தானம் செய்துவிட்டு
உடலின் தேவைக்கு
ரத்த தானத்திற்கு
ஊரெல்லாம் அலைந்து....
ஒரு கட்டத்தில்
நினைவு தடுமாறி
உடல் தானம் செய்ய
பெற்றோர் சிந்தை தடுமாற....

இதற்கெல்லாம் காரணம்
நிதானம் இல்லாமல்
வீரத்தை காட்ட
வாகனம் ஒட்டியதன் விளைவா??
அல்லது விதியா????
இதற்குத்தான்
ஆண்டு தோறும்
லட்சக்கணக்கில் வாகன விற்பனையா??

எழுதியவர் : சாந்தி (26-Jun-14, 11:49 pm)
பார்வை : 91

மேலே