வீழ்ந்திடாது வெற்றி தோல்விகள் பலமிருக்க --- அரவிந்த் C

பறந்து செல்லும்
கார்மேகங்களாய்..
கடந்து செல்லும்
நம் சிறு சிறு தோல்விகளும்...!

துவண்டு விடாதே
அதை எண்ணி..
ரோஜா செடி போல் தான்
நம் வாழ்க்கை...!

வெற்றி என்னும்
பூ பறிக்க
தோல்வி என்னும்
முட்களை கடந்தே ஆக வேண்டும்...!

துன்பத்தைக் கண்டு
துவண்டு விட்டால்..
இன்பத்தைக் தழுவி
விளையாட இயலாது...!

அக்னி வெயிலாய்
சோகம் உன்னை வாட்டலாம்..
பூச்செடியாய் வாடாமல்
கள்ளிச் செடியாய்
அனலை அணைத்து
வளர முயற்சி செய்...!

தோல்வியை
காதல் செய்..
அப்போது தான்
வெற்றியை
திருமணம் செய்ய இயலும் ...!

எந்தவொரு அழகான
ஓவியமும்,
ஒரு சிறு புள்ளியில் தான்
ஆரம்பமாகும்...!

அதுபோல
உன் மிகப்பெரிய வெற்றியும்,
சிறு சிறு தோல்வியின்
வேர்களிலிருந்தே துவங்கும்...!

போதுமென்ற மனமே
சோர்வு கொள்..
வெற்றி தேடலில் மட்டும்
இன்னும் வேண்டும் என்று
வெறி கொள்...!

அவ்வெறியே உன்னை
வெற்றியை நோக்கிப்
பயணிக்க செய்யும்...!

தோல்வி துணை கொண்டு
பயணிக்க தொடங்கு
உன் வாழ்க்கை வழிகளில்...!

உன் பயணத்தின் முடிவு
வெற்றியாய் அமையும்...
மனம் தளராதே மனிதா
முடியும் என்று முயற்சி செய்
உலகமும் உனக்கு வசப்படும்..!!!

எழுதியவர் : அரவிந்த் .C (27-Jun-14, 3:39 pm)
பார்வை : 1036

மேலே