என்னை மாற்றாதே

தலைக்கோதி என்னை கோழையாய் மாற்றாதே
கோபத்தோடு பார்த்து என்னை குழந்தையாய் மாற்றாதே
சிறகு போன்ற இமையால் என்னை சிறை பிடிக்காதே
உன் அரும்பு மீசையால் என்னை அறுக்க நினைக்காதே
துணி போல என் மனதை துவைக்காதே
துகில்காலையில் வரும் என் கனவை மறைக்காதே
கசக்கி எரிய காதல் ஒன்றும் உன் கை அடக்கமானது அல்ல
அந்த கடவுளுக்கும் இந்த கள்வனுக்கும் சொந்தமானது
ஜன்னல் ஓர பார்வையில் என் ஜாதகத்தை மீண்டும் ஜனனிக்க வைக்காதே
அன்று உன் காதில் தோடு
இன்று நான் உன்னோடு
காற்று வந்து தழுவும் போது ஆடும் முடி
காதல் வந்து தழுவும்போது சேருவேன் உன் மடி
ஊதா நிறம் நீ அனிந்த சேலை
என் உறக்கத்தில் வர மறுக்குது காலை