முகமுடியுடன் நான்---அரவிந்த் C
உனக்காக
என்றுரைத்து,
என் சுய அடையாளம்
தான் மறைத்து..
காதல் பூவாய் நான்
அனுதினமும்
உன்னை எண்ணி பூக்க..
பிரியமில்லாமல் நீ பேசும்
வார்த்தைகளின் அனலில்
என் காதல் பூ வாடி உதிருதடா..
கொஞ்சி பேசி
செல்ல சிணுங்கல்கள்
செய்ததில்லை நீ..
தொலைதூரத்தில் இருந்தாலும்
தொலைபேசி அழைப்புகளில்
செல்ல தொல்லைகள்
தரவில்லை நீ..
ஆனால் என்னுள்
இந்த தவிப்புகளை மட்டும்
பல தந்து
கொல்கிறாய் நீ..
அரவணைக்க
உன் கைகள் வருமோ என்ற
எதிர்பார்ப்பிலேயே
என் எதிர்காலம்
கடந்துவிடுமோ என்னும் அச்சம்
என்னுள் தாண்டவமாடுதடா..
சிறு சிறு கவனிப்பும் செய்யாமல்
நீ நிற்க
என் தொண்டைக்குழிக்குள்
உணவும் இறங்க மறுக்குதடா
என்னவனே
உனக்காக மட்டும் நான்
உனக்காக மட்டுமே நான்..
வேரின்றி மரமில்லை
அதுபோல
நீயின்றி நானில்லை..
உன் கொஞ்சல் மொழிகளில்
நினைந்து மகிழ்ந்திட துடிக்குதடா
என் மனம்
எப்போது சமதானப்படுதப்போகிறாய் நீ..!!!