நினைவுகள் பிரியாத வரம் வேண்டும் 555
![](https://eluthu.com/images/loading.gif)
என் உயிர் தோழியே...
புரிந்து கொள்ளுதல்
இல்லாமல் போனது...
உன் மணவாழ்க்கை
என்கிறாய்...
புரிந்து கொள்ளுதல்
இருவருக்கும் வேண்டும்என்பதை...
நீயும் உணரவேண்டும்
என் தோழியே...
மனைவிக்கு தோழன்
காதலன் தான் என்கிற...
சமுதாய எண்ணங்களுக்கு...
உன் கணவரை
நீ திட்டுவது...
உன்னிடம் புரிதல்
உண்டா என் தோழி...
தொடர்புகள் விட்டு
போவதால்...
நம் அன்புகள் விட்டு போகும் என்ற
உன் மனதை மாற்று...
கண்ணெதிரில் தோன்றாதது
உலகை விட்டு போய்விடுமா...
அழுகின்றாய் நீ
எனக்கு மழலைதான்...
உலகிற்கு நீ மங்கை...
வாழ்ந்திருப்போம் நாம்
சந்திக்க வாய்ப்புகள் வரும்...
நமக்காக நாம் வாழும்வரை
வாய்ப்புகளும் காத்திருக்கும்...
காதலின் அன்பையும்
நட்பின் அன்பையும்...
வித்தியாச படுத்திபார்க்க
உன் கணவருக்கு மொழி
கற்று கொடு...
மாற்று பெயர்களில் நம்
தொடர்புகள் வேண்டாம்...
காதல் நட்பு மொழிகளை புரியாமல்
போவது நாமாகத்தான் இருப்போம்...
இவ்வுலகம் அழியும்
வரை நம் நட்பிற்கும்...
பிரியாத வரங்களோடு
ப்ரியா விடைகொடு தோழி எனக்கு...
என் உயிர் தோழியே.....
[என் அன்பு தோழி தமிழ்காக].....