நம்பிக்கையில்லா நான்காண்டுகள்

நம்பிக்கையில்லா நான்காண்டுகள்!

கருவில் உயிர்கள்
உருவம் பெருமுன்
மரணம் உண்டென
எடுத்துரைத்தாய்....

ஜனனம் தொடங்கி
துரத்தும் மரணம்
எந்நொடி எவர்க்கும்
பொதுவென்றாய்.

உன் விழி மூடி
என் விழி திறந்தாய்
இம்மை துறந்தால்
மறுமையென்றாய்.

ஆண்டுக்கொரு முறை
எனக்காய் மட்டும் - இப்
பன்னிரெண்டில், மலரும்
குறிஞ்சி நீயன்றோ!

வருடம் தோறும்
வாஞ்சையா யுனை
கல்லறை தேடி
வரவழைத்தாய்.

நம் கர்த்தர் என்னையும்
கரங்களில் எடுத்தால்
நித்தம் உன்னையும்
காண்பேனே!

நீ இல்லாவிடத்தில் தேடித் தேடியே
நம்பிக்கை மட்டும் இழக்கின்றேன்!

அண்ணன் ஒருவன்
உண்டெனச் சொல்லி
ஒரு முறை மீண்டும் வருவாயோ?
என் கனவிலேனும் வருவாயோ!

எழுதியவர் : பேட்ரிக் கோயில்ராஜ் (2-Jul-14, 10:22 am)
சேர்த்தது : Patrick Koilraj
பார்வை : 67

மேலே