20 நாள் வெற்றியாளன் நான்

இறுதித் தேர்வாய்
என் கதைகள் நான்கு
மடங்குகள் நான்காய்
மகிழ்ந்தே உணர்ந்தேன்

கதைகள் இருபது
அதில் இரு கதை
என் கதை முன்னிலை
இந் நிலை தொடர்ந்தது

நாளும் தொடராய்
பார்ப்பேன் மகிழ்வேன்
முன்னிலை என் கதை
இரு கதை

மனமது மகிழ்ந்தன
கோட்டைகள் கட்டின
பரிசு பெற்றவர் - என
நாமம் கனவிலும் விண்ணிலும்

வாரங்கள் மூன்று
முதலிரண்டிடம் என்றும்
என் கதைகள் இரண்டும்
தலைமை தாங்கின

நீயும் அழகுதான்
எனைப்பார்த்து சிரித்தன
கருப்பே கருவாயின
பார்த்தவர் அதிகமாயினர்

திங்களது கடைசி நாள்
தளத்தாரின் பார்வை நாள்
வீழ்ந்தன என் கதை
நானும்தான்

சந்தேகம் எனக்கொன்று
இறுதித்தேர்வுக்காய்
புள்ளி பார்வை - இதனால்
நல்ல படைப்பும் விடுபடலாமன்றோ!

..............................................................................................................................................
அடியேனின் அபிப்பிராயம்!
இறுதித் தேர்வுக்காக படைப்புக்களை புள்ளிகளை வைத்து தேர்வு செய்யப்படுகின்ற போது நண்பர்களின்
வட்டம் விசாலமானவர்கள் தெரிவு செய்யப்பட வாய்ப்பிருக்கிற அதே வேளை நல்ல படைப்புக்கள் விடுபடவும் வாய்ப்பிருக்கிறது.

அதே நேரம் பரிசுக்குறியவரை தெரிவு செய்யும்போது மட்டும் தளத்தாரின் முடிவாக இருக்கிறது.

இதன் மூலம் நான் சொல்ல வரும் விடயம் என்னவென்றால் படைப்புக்களை புள்ளிகளின் அடிப்படையில் இல்லாது தளத்தாரின் துணிவுடன் மட்டும் இறுதிப்பட்டியலை தெரிவு செய்து தற்போதைய முறையில் பரிசுக்குரியவரை தெரிவு செய்தல் சிறப்பு என நினைக்கிறேன்!

அன்புடன் ஜவ்ஹர்!

எழுதியவர் : ஜவ்ஹர் (2-Jul-14, 10:59 am)
பார்வை : 233

மேலே