இது காதல் நேரம்

பெண்ணே!
எந்த தேசத்து பட்டில் செய்தது
உன் மேனியென்று
இந்த தேசத்து பட்டு பூச்சிகள்
பட்டிமன்றம் நடத்துகின்றன.

பூக்கள் நடத்திய மாநாட்டில்
நீதான்
தலைவியாமே.

உன்பார்வைச் சூரியன் பட்டதும்
பூத்துச் சிரிக்கிறேன்
இந்த சேற்றுத் தாமரை சந்திரன்.

நீ வயல்வரப்பில் நடக்கையில் நாற்று நடனமிடும்
நீ கடற்கரையில் இருக்கையில் காற்று சலனப்படும்


உன்
சேலைப் பூச்சிகளை நோக்கி
சோலைப் பூச்சிகள் படையெடுப்பு
உன்னிடம்
அல்லியும் தாமரையும் மணப்பதால்
நீயுமொரு பூங்கா படைப்பு

அந்திச் சூரியனும்
அந்த சந்திரனும் சந்திக்குமிடம்
உன் நெற்றி மேட்டில்தானே ..
பொட்டாக சூரியனும்
பிறையான நெற்றியும்

தோற்காத நானும் தோற்றுப் போனேன்
உன்னை வர்ணிக்க வார்த்தைகள் தேடி
போர்க்கால உத்தியெல்லாம் புறமுதுகிட்டோடும்
உன்வேல்விழி பார்வைகள் முன்னாடி .

விலகிப்போ என்ற ஒற்றைச் சொல்லில்
நான்
உலர்ந்து போகிறேன்
மறந்து போ என்ற கடினச் சொல்லில்
நான்
உதிர்ந்து போகிறேன்.

எழுதியவர் : சுசீந்திரன் (2-Jul-14, 9:51 pm)
Tanglish : ithu kaadhal neram
பார்வை : 102

மேலே