என் மனமே

மனமே பேசு
என்னுடன் மட்டுமாவது ?

வார்த்தைகளால் பேசுவாயென
வாடிநின்று
வயதுதான் போய்விட்டது
வாழ்வும் போகும்முன்
மௌனத்திலாவது பேசு ..

ஆழ்மனதின் அர்த்தங்கள்
அவசியம் புரியவேண்டும்
அதற்காகவாவது பேசு ..

நீ பேசும்
அந்த கண நிமிசத்தில்

நான் 'என்னுள் '

ஒரு சிசுவைப்போல்
துடிக்கிறேன் ...

ஒரு புதுமலரைப்போல்
மறுபடியும் பிறக்கிறேன் ..

ஒரு குழந்தைப்போல்
கள்ளமில்லா சிரிக்கிறேன் ...

ஒரு பறவைப்போல்
சிறகடித்துப் பறக்கிறேன் ..

என் நிறைகளை மட்டுமின்றி
குறைகளையும்
கூசாமல் கூறுபவன் நீ
ஆதலால் பேசு ..

உன் மௌனங்கள்
என்னை மாற்றவல்லவை ..

உன் வார்த்தைகள்
என்னை வாழவைப்பவை ...

உன் அர்த்தங்கள்
என்னை அழகுறச் செய்பவை ..

நீ பேசுவாய்
என்னுள் மட்டுமாவது
அந்த கண நிமிசத்திற்காக
நான் காத்திருப்பேன்
என் காலம்
முடியும் வரையிலும் ?

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (2-Jul-14, 10:06 pm)
Tanglish : en maname
பார்வை : 136

மேலே